\
ஆதார் திருத்தம்: போஸ்ட் ஆபிஸ்களில் ஏற்பாடு

ஆதார் திருத்தம்: போஸ்ட் ஆபிஸ்களில் ஏற்பாடு

ஆதார் திருத்தம்: போஸ்ட் ஆபிஸ்களில் ஏற்பாடு
Published on

ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள, சென்னையில் 10 தபால் நிலையங்களில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாளை முதல் இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னை தலைமை தபால் அலுவலகம், அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், தி. ‌நகர் தலைமை அஞ்சலகம், மயிலாப்பூர் தலைமை அஞ்சலகம், பரங்கிமலை தலைமை அஞ்சலகம், பூங்கா நகர் தலைமை அஞ்சலகம், அசோக் நகர் உள்ளிட்ட 10 அஞ்சலகங்களில் ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 515 அஞ்சலகங்களில் படிப்படியாக இந்த வசதி விரிவுபடுத்தப்ப‌ட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com