பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண் PT WEP

வருடத்திற்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து மோசடி.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்.. நீளமான லிஸ்ட்!

திருப்பூரில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்தவர் தேவி (28). இவர் கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தேவிக்குத் திருப்பூரில் எலக்ட்ரீஷியனாக பணிபுரியும் குணசேகரன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குணசேகரன், தேவியிடம், உனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு நான் உதவி செய்கிறேன் என கூறியுள்ளார். இதனால் இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். பின்னர் தேவியை குணசேகரன் திருமணம் செய்து கொண்டார்.

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

இந்தநிலையில், இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்ததுள்ளது. ஒருகட்டத்தில் குணசேகரன் நடவடிக்கையில் தேவிக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 குணசேகரன்
குணசேகரன்

இது குறித்து தேவி விசாரித்ததில், குணசேகரனுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குணசேகரன் தேவியை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்
கள்ளக்குறிச்சி: பிரசவ வார்டில் பணம் கேட்கும் ஊழியர்கள் - அடிப்படை வசதியின்றி அரசு மருத்துவமனை

இதனையடுத்து தேவி திருப்பூர் வடக்கு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேவி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திருப்பூரில் எலக்ட்ரீஷியனாக குணசேகரன் பணியாற்றி வருகிறார். பல்வேறு இடங்களுக்கு பணிக்குச் சென்று வந்துள்ளார். அப்போது திருப்பூரில் தனியாக வசித்து வரும் ஆதரவற்ற பெண்கள், விதவை பெண்களிடம் நெருங்கிப் பழகி 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பணம், நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனிடையே கேரளாவைச் சேர்ந்த வனிதா என்ற பெண்ணை முறைப்படி திருமணம் செய்தார். வனிதாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. முதல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்த குணசேகரன் அதன் பிறகு 2017ம் ஆண்டு திருப்பூர், பெருமாநல்லூரை சேர்ந்த கனகா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

பின்னர் 2019ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த செல்லம்மாள், 2020ம் ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த சசிகலாவைத் திருமணம் செய்துள்ளார். இதையடுத்து திருப்பூரைச் சேர்ந்த காளீஸ்வரி, தேவியைத் திருமணம் செய்துள்ளார். இதுவரை 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். 7-வதாக சிவகங்கையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சினேகா என்பவருடன் பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதற்காகத் தேவியை வீட்டை விட்டு விரட்டியுள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள குணசேகரனைத் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்
கர்நாடகா: பாழடைந்த வீட்டில் நள்ளிரவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் - அதிர்ச்சி பின்னணி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com