‘பெசன்ட் நகர் மாதா ஆலய திருவிழா’ - இளைஞர் வெட்டிக் கொலை

‘பெசன்ட் நகர் மாதா ஆலய திருவிழா’ - இளைஞர் வெட்டிக் கொலை

‘பெசன்ட் நகர் மாதா ஆலய திருவிழா’ - இளைஞர் வெட்டிக் கொலை
Published on

சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற அன்னை மாதா ஆலய திருவிழாவில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

பெசன்ட் நகர் மாதா கோயிலின் 47-வது ஆண்டு திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தங்க சரிகை அணிந்து வலம் வந்த மேரி மாதாவை பக்தர்கள் சாலையில் இருபுறமும் நின்று வழிபட்டனர். தேரோட்டம் காரணமாக, பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெசன்ட் நகருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

இதற்கிடையே ஆலய திருவிழாவில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். செனாய் நகரில் வசித்து வரும் மில்லர் என்பவர் தனது குடும்பத்துடன் திருவிழாவைக் காண பெசன்ட் நகருக்குச் சென்றார். ஆலயத்திற்கு சென்ற போது அவரது மகன் பென்னிராஜ், எலியட்ஸ் கடற்கரைக்குச் சென்றதாகத் தெரிகிறது. நீண்ட நேரம் ஆகியும் அவர் ஆலயத்திற்கு திரும்பாததால், குடும்பத்தினர் தேடியுள்ளனர். 

அப்போது அங்குள்ள ராட்டினத்தின் பின்புறத்தில் பென்னிராஜ் வெட்டுக் காயங்களோடு கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பென்னிராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாஸ்திரி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோதல் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை சார்பில் சந்தேகிக்கப்பட்டுகிறடு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com