காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம் : கோவையில் ஆணவக் கொலை?

காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம் : கோவையில் ஆணவக் கொலை?

காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம் : கோவையில் ஆணவக் கொலை?
Published on

கோவையில் காதல் திருமணம் செய்த மணமகன் ஆணவக் கொலை செய்யப்பட்டார். பெண் உயிருக்குப் போராடி வருகிறார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியினை சேர்ந்தவர் கனகன். இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த தர்சினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு கனகனின் அண்ணன் வினோத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று தர்சினியை கனகன் திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கனகனின் அண்ணன் வினோத் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலில் கனகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தர்சினி பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், 2 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக உள்ள வினோத்தை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com