நண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி
பொள்ளாச்சி அருகே நண்பனின் மகளுக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கார்த்தி (27) என்ற நபர், தனது நண்பரை காண சென்றுள்ளார். அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நண்பரின் மகளை அவர் தூக்கிச்சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் கார்த்தி குழந்தையுடன் திரும்பவில்லை. இதனால் குழந்தையை காணாமல் பெற்றோர் தேடி வந்தனர். அப்போது மறைவிடத்தில் இருந்த கார்த்தியை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்.
அங்கு குழந்தையை கார்த்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கார்த்திக்கு தர்ம அடிகொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த கார்த்தி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.