பைக்கில் வேகமாக சென்ற இளைஞர் சுவரில் மோதி பரிதாப பலி
திருத்துறைப்பூண்டியில் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர் ஒரு வீட்டு காம்பவுன்ட் சுவரில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பொன்னையன் செட்டித் தெரு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் அரவிந்த் பாரதி பாலிடெக்னிக் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவர் மூன்று நாட்களில் வெளிநாடு செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலை வீட்டிலிருந்து பைக்கில் கடைவீதிக்கு சென்ற அரவிந்த், நாகை சாலையில் வேகமாக பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது பவுண்டடி திருப்பம் பகுதியில் கட்டுபாட்டை இழந்து எதிரே இருந்த வீட்டின் சுற்றுசுவர் மீது மோதிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீஸ் டிஎஸ்பி பொன்.கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்ப இடத்தை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.