\
முதல்வருக்கு போனில் கொலை மிரட்டல் - இளைஞர் சிறையில் அடைப்பு

முதல்வருக்கு போனில் கொலை மிரட்டல் - இளைஞர் சிறையில் அடைப்பு

முதல்வருக்கு போனில் கொலை மிரட்டல் - இளைஞர் சிறையில் அடைப்பு
Published on

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தமிழக முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், பராசக்தி நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (33). இவர் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். குடும்ப தகராறு காரணமாக மனைவி சண்டையிட்டு வீட்டை விட்டு சென்றதால், மன விரக்தியில் இருந்துள்ளார். 

விரக்தியில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட பேசிய அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த சேலையூர் காவல்துறையினர், நேற்று வினோத்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com