இளம்பெண்ணை கத்தியால் கொன்ற ஒருதலைக் காதலன் : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

இளம்பெண்ணை கத்தியால் கொன்ற ஒருதலைக் காதலன் : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
இளம்பெண்ணை கத்தியால் கொன்ற ஒருதலைக் காதலன் : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

நெல்லையில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலரை அடித்து உதைத்த பொது மக்கள் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு எந்தப் பதற்றமுமின்றி நடந்து சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கொல்லப்பட்டவர் கன்னனயாகுமரி மாவட்டம் வேலிமலையைச் சேர்ந்த மெர்சி. அவரைக் கொன்றவர் நெல்லை மாவட்டம் மகிழடியைச் சேர்ந்த ரவீந்திரன். மெர்சியை ரவீந்திரன் கொலை செய்தது ஏன்? என்பதை அறிய சில மாதங்கள் பின்னோக்கி பயணிக்க வேண்டும். 

வள்ளியூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார் மெர்சி. கடை விடுதியிலேயே அவர் தங்கியிருந்தார். மெர்சி வேலை பார்த்த கடையில் பொறியியல் பட்டதாரியான ரவீந்திரன் பணிக்கு சேர்ந்திருக்கிறார். மெர்சியை ரவீந்திரன் காதலித்ததாக கூறப்படுகிறது. அவரது காதலை ஏற்க மெர்சி மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் துணிக்கடையில் இருந்து ரவீந்திரன் விலகி விட்டதாக சொல்லப்படுகிற‌து. அதோடு எல்லாம் முடிந்தது என மெர்சி நினைத்திருக்கலாம். ஆனால் ரவீந்திரன் அப்படி நினைக்கவில்லை. 

சில மாதங்கள் கடந்தன. செவ்வாய்கிழமை வழக்கம்போல் பணியை முடித்து விட்டு விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார் மெர்சி. அவர் வரும் வழியில் ரவீந்திரன் காத்திருந்ததாக தெரிகிறது. மெர்சியை கண்டதும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார் ரவீந்திரன். பொது இடத்தில் ஒரு பெண்ணை குத்திவிட்டு எந்த பதற்றமுமின்றி நடந்து சென்றார் அவர். இதைப் பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பின்னர் சுதாரித்துக் கொண்டு ரவீந்திரனை பிடித்து அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். படுகாயத்துடன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மெர்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒருதலைக்காதல் இளம்பெண்ணின் உயிரைக் குடித்துவிட்டது. ரவீந்திரன் கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சிகள் பார்ப்பவரை பதறவைக்கும் வகையில் உள்ளது.

சிசிடிவி காட்சியை காண : https://www.youtube.com/watch?v=ls-f6dRt3U8

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com