\
திடீரென பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்.. பெண்ணாடம் கடை வீதியில் பரபரப்பு

திடீரென பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்.. பெண்ணாடம் கடை வீதியில் பரபரப்பு

திடீரென பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்.. பெண்ணாடம் கடை வீதியில் பரபரப்பு
Published on

பெண்ணடாம் கடை வீதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் தன்னை தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞரால் பரபப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்றிரவு அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைவீதி பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் கூடினர். அப்போது காய்கறி மார்கெட் எதிரில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் செல்லும் வழியில் திடீரென ஒரு இளைஞர் கையில் வைத்திருந்த பிளேடால் சரமாரியாக தன்னை தானே கழுத்தில் அறுத்துக் கொண்டார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்த இளைஞர்கள் அவரை பிடித்து பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணாடம் போலீசார், அந்த இளைஞரை மீட்டு பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் அந்த இளைஞர் விருத்தாசலம், வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் மணிகண்டன் (32). என்பது தெரியவந்தது. மேலும் கழுத்தை அறுத்து கொண்டதற்கு காரணம் குறித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாகவும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவும், கஞ்சா மது போதையில் இருப்பது போலவும் நடந்து கொண்டதால் கழுத்தை அறுத்துக் கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இளைஞர் தன்னை தானே பிளேடால் அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com