மறுமணம் செய்ய மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மறுமணம் செய்ய மறுத்த விதவை பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் கிரிஜா-மணிகண்டன் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் கிரிஜாவின் கணவர் மணிகண்டன் இறந்து விட்டாதால் இரண்டு பெண் குழந்தைககளுடன் இவர் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் ஜான்றோஸ்(28) என்பவர் விதவையான கிரிஜாவிடம் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கிரிஜா ஒரு வருடத்திற்ககு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்து ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளார்.
ஜான்றோஸ் மீது அந்த வழக்ககும் நடைப்பெற்று வருகிறது. இந்தச் சூழலில் தன்னை திருமணம் செய்ய மறுத்த கிரிஜாவை பழி வாங்க நினைத்த ஜான்றோஸ் அவர் நேற்று இரவு முகத்தின் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிரிஜா நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே ஜான்றோஸ் தற்கொலைக்கு முயன்றார். ஆகவே தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிரிஜா மீது இவர் ரப்பர் பால் உறைய வைக்க பயன்படுத்தும் ஆசிட்டை கொண்டு வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து திருவட்டார் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.