\
பூனை கடியால் இளைஞர் மரணம்
பூனை கடியால் இளைஞர் மரணம்pt

மதுரை| பூனை கடித்ததை அலட்சியமாக விட்ட இளைஞர்.. பறிபோன உயிர்!

பூனைக்கடியால் ரேபிஸ் நோய்க்கு ஆளாகி இக்கட்டான சூழலில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
Published on: 

அவனியாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பூனை ஒன்று கடித்துள்ளது. இதை அவர் கண்டுங்காணாமல் விட்ட நிலையில், காயம் பெரிதாகி ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

உயிரை பறித்த அலட்சியம்..

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்ட நிலையில், தனி சிகிச்சைப் பிரிவில் இளைஞர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தொற்றால் கடும் வேதனைக்குள்ளாகிவந்த இளைஞர், உயிரை மாய்த்துக்கொண்டார். முறையான சிகிச்சை பெறாமல் அலட்சியமாக விட்டது பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பது கேட்போரை நடுங்கச் செய்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com