நெருப்பு ஓவியத்தில் அசத்தும் இளைஞர்

நெருப்பு ஓவியத்தில் அசத்தும் இளைஞர்

நெருப்பு ஓவியத்தில் அசத்தும் இளைஞர்
Published on

உலகில் சொற்பமான நபர்கள் மட்டுமே உருவாக்கும் நெருப்பு ஓவியத்தில் தனித்துவத்தை படைத்து வருகிறார் கோவையை சேர்ந்த இளைஞர் வசந்தகுமார் .

கோவையில் சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்த ஓவியரான வசந்தகுமார், சிறு வயது முதல் இருந்தே ஓவியக் கலையில் தனக்கான தனி இடம் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் பல புதிய படைப்புகளை படைத்து வருகிறார். அந்தவகையில் ஓவியத்தை வரைந்து அதன் மீது நெருப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக ஒரு புதுவிதமான ஓவியத்தை உருவாக்கி வருகிறார்.

ஆரம்ப  கட்டத்தில் பல கடினங்களை சந்தித்தாலும், இந்த ஓவியத்தின் முடிவில் பிரத்யேக புதுவித கலையுடன் உள்ளது. இதனால் தனது ஆசிரியர்களின் பாராட்டுகளை பெற்று தொடர்ந்து பல ஓவியங்களை இதன் மூலம் செய்து வருகிறார் வசந்தகுமார். பல வண்ணங்களில் தூரிகைகள் மூலமாக படைக்கும் ஓவியங்களை விட இந்த நெருப்பு ஓவியங்களுக்கு மிக சக்தியான கலையாக இருப்பதாக கூறுகிறார்.

தினம் தினம் தீபாவளி பண்டிகையை போல இவரது இல்லம் எப்பொழுதும் பட்டாசு சத்தத்துடன் காட்சியளிக்கிறது. தனது ஓவியங்களை உலகளவில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் தனது ஓவியங்களை படைத்து வரும் இவர், தொடர்ந்து மாணவர்களுக்கு தனது ஓவியப் படைப்புகளை காண்பித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் தனது கலைப்பணியை தொடர்ந்து வருகிறார். 

ஓவியர் சிலரால் மட்டுமே உருவாக்கும் இவ்வகை நெருப்பு ஓவியத்தில் தனது கலைநயத்தை படைத்து உலகளவில் பிரசித்தி பெற்று வருகிறார் இளைஞர்  வசந்தகுமார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com