புதுக்கோட்டை பூசத்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் - புவனேஸ்வரி தம்பதியர். இவர்களது மகன் அருணகிரி என்ற அருண் பிரசாத் (22) என்பவர் எம்பிஏ படித்துவிட்டு போலந்து நாட்டில் வேலைக்காக சென்றுள்ளார். இந்விலையில், அங்கு அவர், கார்களை வாடகைக்கு விடும் டிராவல் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது டிராவல் ஏஜென்சிக்கு அடிக்கடி பணி நிமித்தமாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஹனியா என்ற அன்னாரில்ஸிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நட்பாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி நிலையில், போலந்து நாட்டில் சட்டமுறைப்படி இருவரும் நிச்சயம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இது குறித்து உறவினர்களிடம் அருண்குமார் சொன்னதை அடுத்து அருண்குமாரின் பெற்றோர், இங்கு முறைப்படி திருமணம் நடத்த வேண்டுமென முடிவெடுத்து இவர்களது திருமணம் புதுக்கோட்டை அன்னவாசல் செல்லும் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கோலகலமாக இன்று நடைபெற்றது.
இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டு அருண் பிரசாத் மற்றும் ஹனியா தம்பதியரை வாழ்த்தினர்.