தமிழ்நாடு
கழுத்தை அறுத்துக் கொண்டு போலீஸாரை மிரட்டிய இளைஞர்
கழுத்தை அறுத்துக் கொண்டு போலீஸாரை மிரட்டிய இளைஞர்
இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு போலீஸாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
கடலூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவ்வழியாகச் சென்ற இளையராஜா என்பவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அவர் மதுபோதையில் இருப்பதை கண்டறிந்த போலீஸார், இளையராஜா மீது வழக்கு பதிந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனிடையே கடலூர் புதுநகர் காவல்நிலையத்திற்குச் சென்ற இளையராஜா, தனது வாகனத்தை திரும்பத் தருமாறு போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த இளையராஜா, பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு காவலர்களுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சிக்குள்ளான காவலர்கள் இளையராஜாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.