பனைமரத்திலேயே உயிரிழந்தத் தொழிலாளி: உடலை மீட்பதில் அலட்சியம்

பனைமரத்திலேயே உயிரிழந்தத் தொழிலாளி: உடலை மீட்பதில் அலட்சியம்

பனைமரத்திலேயே உயிரிழந்தத் தொழிலாளி: உடலை மீட்பதில் அலட்சியம்
Published on

ஊத்தங்கரை அருகே பனைமரத்தில் பதநீர் இறக்கும்போது உயிரிழந்த தொழிலாளியின் உடலை தீயணைப்புத் துறையினர் அலட்சியமான முறையில் மீட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற தொழிலாளி பதநீர் இறக்குவதற்காக அப்பகுதியில் உள்ள பனைமரத்தில் ஏறியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட‌தால் மரத்தில் இருக்கும் போதே அவர் உயிரிழந்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. ‌இதனைத்தொடர்ந்து அவர் இறந்து இருப்பதைக் கண்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திர உதவியுடன் பனை மரத்தை ஆட்டி உடலை கீழே இறங்கச் செய்தனர். இந்தச் செயல் அங்கு இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் தீயணைப்புத் துறையினர் அலட்சியத்துடன் செயல்பட்டு தொழிலாளியின் உடலை மீட்டதாக உறவினர்கள், கிராமத்தினர் வேதனை தெரிவித்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரிடம் பெரிய அளவிலான ஏணி உள்ளிட்ட உபகரணங்கள் இல்லாததே இதற்குக் காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com