உரிமை தொகை திட்டத்தை தொடங்கும் முன் அண்ணா நினைவிட பதிவேட்டில் ஸ்டாலின் எழுதிய வார்த்தை..

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கும் முன்பாக அண்ணாவின் நினைவு இல்லத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்த வருகை பதிவேட்டில் உருக்கமாக எழுதினார்.
mkstalin
mkstalinfile image

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அறிஞர் அண்ணா பிறந்தநாளில் அவர் படித்த காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் திட்டத்தை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக காஞ்சிபுரத்தில் இருக்கும் அண்ணாவின் நினைவு இல்லத்துக்கு சென்ற அவர், அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

mkstalin
’கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ - யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்; யாருக்கு கிடைக்காது?

அப்போது, அங்கிருந்த வருகை பதிவேட்டில், கையெழுத்திட்டவர், “பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று திராவிட மாடலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் தொடங்கி வைப்பதில் பெருமையடைகிறேன்” என்று எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com