\
திருப்பதியில் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதியில் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதியில் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
Published on

திருப்பதியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

திருப்பதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, செம்மரம் கடத்தி சென்ற கடத்தல்காரர்களை சுற்றிவளைத்தனர். அவர்களிடமிருந்து கடத்தல்காரர்கள் வேனில் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை துரத்தி சென்ற காவல் துறை அதிகாரிகள் ஒரு டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் மற்றும் அவர்கள் சென்ற வேனை கைப்பற்றினர். ஆனால் வேனில் இருந்த கடத்தல்காரர்கள் காவல் துறை அதிகாரிகளிடமிருந்து தப்பி ஒடினர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருப்பதி காவல் துறையினர் செம்மரம் கடத்தி சென்ற கடத்தல்காரர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com