கணவரால் ஏமாந்த பெண்: 4 திருமணம் செய்தவருக்கு வலைவீச்சு!

கணவரால் ஏமாந்த பெண்: 4 திருமணம் செய்தவருக்கு வலைவீச்சு!
கணவரால் ஏமாந்த பெண்: 4 திருமணம் செய்தவருக்கு வலைவீச்சு!

நாகையில் ஜெசிமா என்ற பெண்ணை, 4 திருமணம் செய்த அவரது கணவர் வீட்டில் சேர்க்க போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாகை மாவட்டத்தை சேர்ந்த முகமது நியாஸ் என்பவர், இலங்கையை சேர்ந்த ஜெசிமா என்ற பெண்ணை துபாயில் இருக்கும் போது
காதலித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் இலங்கை சென்று அங்கு திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை
உள்ளது. இதையடுத்து ஜெசிமாவை நாகையில் உள்ள தனது ஊரான குத்தாலத்திற்கு முகமது அழைத்து வந்துள்ளார். அத்துடன் தொழில்
துவங்க வேண்டும் எனக்கூறி, ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 30 சவரன் நகையை வாங்கிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் முகமது ஏற்கனவே 2 திருமணம் செய்தவர் என்பது ஜெசிமாவிற்கு தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த ஜெசிமா குத்தலாம்
காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீண்ட நாட்களாக புகாரின் பேரில் கணவர் கண்டுபிடிக்கப்படாததால் இலங்கைக்கு
சென்றுள்ளார்.

இந்நிலையில் முகமது நியாஸ் 4வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு பெண் குழந்தை
பிறந்துள்ளதாகவும் ஜெசிமாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த குழந்தையை பார்க்க முகமது குத்தலாம் வந்ததும்
ஜெசிமாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் இலங்கையிலிருந்து உடனடியாக குத்தலாம் விரைந்த ஜெசிமா, நியாயம் கேட்பதற்காக
முகமது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு முகமதுவின் தாய், தந்தை ஆகியோர் ஜெசிமாவை அடித்து விரட்டியுள்ளனர். அத்துடன்
கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் ஒரு வழக்கை காவல்நிலையத்தில் அவர் பதிவுசெய்துள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், அவர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி செல்லப்பாண்டியன், “இடைக்கால உத்தரவில் ஜெசிமாவை அவரது கணவர் வீட்டில் குத்தாலம் போலீசார் சேர்க்க வேண்டும். அவரது வீடு பூட்டப்பட்டிருந்தால் போலீசார் உதவியுடன் பூட்டை உடைத்து, வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும். அவருக்கு எதிர் மனுதாரரால் இடையூறு ஏற்பட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com