திருமணம் செய்ய கோரியதற்காக காதலனால் தீ வைக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பலி

திருமணம் செய்ய கோரியதற்காக காதலனால் தீ வைக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பலி

திருமணம் செய்ய கோரியதற்காக காதலனால் தீ வைக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பலி
Published on

திருப்பூரில் காதலனால் தீ வைக்கப்பட்ட  பூஜா என்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

பனப்பாளையம் அருகே பூஜா (19) என்ற இளம்பெண் தலையில் காயங்களுடன் உடலில் உடையில்லாமல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை சாலையோரம் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பூஜா தன் காதலன் லோகேஷிடம்டம் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அப்பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன் லோகேஷ், பூஜாவை தலையில் தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை என சிகிச்சையில் இருந்த லோகேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பூஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com