சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காதல் விவகாரத்தால் காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் சரக்கப்பிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன்-மகேஸ்வரி தம்பதியின் மகள் சுஸ்மிதா. சேலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சுஸ்மிதாவும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்து காணப்பட்ட சுஸ்மிதா, இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் சரக்கப்பிள்ளையூர் பகுதியில் உள்ள கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கிணற்றில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டனர். இறந்தவர் காணாமல் போன இளம்பெண் சுஸ்மிதா என தெரியவந்தது.
You can also watch :