தமிழ்நாடு
முன்னாள் துணை வட்டாட்சியரிடம் நூதன மோசடி : ஏடிஎம்-ல் ரூ.1.35 லட்சம் திருட்டு
முன்னாள் துணை வட்டாட்சியரிடம் நூதன மோசடி : ஏடிஎம்-ல் ரூ.1.35 லட்சம் திருட்டு
அரியலூரில் ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியருக்கு ஏடிஎம்-ல் பணம் எடுத்துத்தர உதவுவதாகக் கூறி நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரான இவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஏடிஎம்-மிற்குச் சென்ற போது அவருக்கு உதவுவதாகக் கூறி ஒரு பெண் பணம் எடுத்துக் கொடுத்துள்ளார்.
பின்னர் அந்தப் பெண், தான் வைத்திருந்த ஏடிஎம் கார்டை பழனிசாமியிடம் மாற்றிக்கொடுத்து விட்டு, அவரது கார்டை வாங்கிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். இதனையடுத்து பழனிசாமியின் ஏடிஎம் கார்டு மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வரை அந்தப் பெண் எடுத்துள்ளார். இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.