ஓடும் ரயிலில் தவறி விழுந்த இளம் பெண்ணை காப்பாற்றிய காவலர்

ஓடும் ரயிலில் தவறி விழுந்த இளம் பெண்ணை காப்பாற்றிய காவலர்

ஓடும் ரயிலில் தவறி விழுந்த இளம் பெண்ணை காப்பாற்றிய காவலர்
Published on

சென்னையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த இளம் பெண்ணை காவலர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர். 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட புறநகர் ரயிலில், ஓடும் போதே ஏற இளம் பெண் ஒருவர் முயற்சி செய்தார். அப்போது நிலை தடுமாறிய அவர் ரயில் சக்கரத்தின் அருகே தடுமாறி விழுந்தார். அத்துடன் ரயில் வேகத்தில் அப்பெண் தண்டவாளத்திற்குள் இழுத்துச்செல்லப்பட்டார்.  இந்தச் சம்பவத்தை அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஆர்.கே.மீனா கண்டார். 

சட்டென எதையும் யோசிக்காமல் பாய்ந்த மீனா, கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து சென்று அப்பெண்ணை காப்பாற்றினார். இதைக்கண்ட அருகில் இருந்த பயணிகளும் காவலர் மீனாவிற்கு உதவினர். பெண் பயணி காப்பாற்றப்படும் காட்சிகள் ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இந்தக் காட்சிகள் வெளியாகி தற்போது பரவி வருகின்றன. மேலும் பெண் பயணியின் உயிரை சாமர்த்தியமாக காப்பாற்றிய காவலர் மீனாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com