woman police attacked
woman police attackedPT

ரத்த வெள்ளத்தில் பெண் காவலர்.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி... காஞ்சிபுரத்தில் பரபரப்பு சம்பவம்!

காஞ்சிபுரம் நகரில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

காஞ்சிபுரம் நகரில் உள்ள பெரிய காஞ்சிபுரம் பகுதி இந்தியன் வங்கி அருகே பணி முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பெண் காவலரை மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலரான டில்லிராணிக்கு கையில் பல இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்துள்ளது. மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் பெண் காவலருக்கே இப்படி அரிவாள் வெட்டு விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரிவாளால் தாக்கப்பட்ட பெண் காவலர் டில்லிராணிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்ப தகராறில் டில்லிராணியை அவரது கணவரே தாக்கியதாக கூறப்படும் நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக டில்லிராணி பிரிந்து வாழும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com