கோவை: நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை - அச்சத்தில் பொதுமக்கள்

கோவை வடவள்ளி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்திய ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் வாகனத்தை முன்னிறுத்தி காட்டுக்குள் விரட்டினர்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் காட்டையொட்டி அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. இந்நிலையில் இரவு நேரங்களில் அதிகமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

elephant
elephantpt desk

இந்நிலையில், நேற்றிரவு கோவை வடவள்ளி அருகே கல்வீரம்பாளையம் பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினர், யானையை காட்டுக்குள் விரட்டினர்.

இதற்கிடையே பொதுமக்களை நோக்கி யானை வேகமாக ஓடிவந்த நிலையில,; வனத்துறையினர் வாகனங்களை முன்னிறுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com