32 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தேர்தல் - பட்டதாரி இளைஞரை தேர்ந்தெடுத்த மக்கள்..!

32 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தேர்தல் - பட்டதாரி இளைஞரை தேர்ந்தெடுத்த மக்கள்..!

32 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தேர்தல் - பட்டதாரி இளைஞரை தேர்ந்தெடுத்த மக்கள்..!
Published on

வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் ஊராட்சியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் பட்டதாரி இளைஞர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள கருப்பம்புலம் ஊராட்சியில் 1957-ம் ஆண்டு முதல் 1986 வரை சுழற்சி முறையில் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 1986-ல் நடைபெற்ற தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர், வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு சுழற்சி முறையில் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின், தற்போதுதான் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டது.

இதில் பட்டதாரி இளைஞர் சுப்புராமன், சபாபதி, நடராஜன் உட்பட 6 பேர் போட்டியிட்டனர். இந்த ஆறு முனைப் போட்டியில், சுப்புராமன் ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் 1028 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். அத்துடன் அவருடைய ஆதரவாளர்கள் 3 பேர் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சுறுசுறுப்பான இளைஞரான சுப்புராமன் 34 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக துண்டு பிரசுரத்தை, தன் கிராம மக்களிடம் வழங்கி தனக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்திருக்கிறார். தற்போது வெற்றி பெற்ற பின்னர், அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என அவர் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com