`வவ்வால் இனத்தைப் பெருக்க பட்டாசு வெடிக்கிறதையே விட்டுட்டோம்!’- இப்படியும் ஒரு கிராமம்!

`வவ்வால் இனத்தைப் பெருக்க பட்டாசு வெடிக்கிறதையே விட்டுட்டோம்!’- இப்படியும் ஒரு கிராமம்!
`வவ்வால் இனத்தைப் பெருக்க பட்டாசு வெடிக்கிறதையே விட்டுட்டோம்!’- இப்படியும் ஒரு கிராமம்!

அழிந்துவரும் பழந்தின்னி வவ்வால் இனத்தை பாதுகாக்கும் கிராமப்புற இளைஞர்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தைச் சுற்றிலும் அரசு காப்பு காடுகள் உள்ளது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால் அடரி கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயில் தோப்பு பகுதியில் உள்ள உயரமான மரங்களில் வசித்து வருகிறது. பாலூட்டி வகையைச் சார்ந்த இந்த வவ்வால் கூட்டம் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருவதாகவும் லட்சக்கணக்கான வவ்வால் வசித்து வந்த நிலையில் தற்போது உயரமான மரங்கள் அழிவின் காரணமாக வவ்வால் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் மாறிவிட்டதாகவும் கிராம மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த பழந்தின்னி வவ்வால் இனத்தைப் பெருக்க அப்பகுதி மக்கள் அத்திமரம், இலுப்பை, அரசமரம், ஆலமரம், புளியன் உள்ளிட்ட அதிக உயரம் வளரக்கூடிய மரங்களையும் பழம் தரக்கூடிய மரங்களையும் அப்பகுதி இளைஞர்கள் தற்போது வளர்த்து வருகின்றனர். மேலும் இயற்கையோடு ஒன்றி வாழும் அப்பகுதி மக்கள் பாலூட்டி பறவை இனமான வவ்வாலை தங்கள் கிராமத்தின் அடையாளமாக போற்றி பாதுகாத்து வருகின்றனர். இதற்காக தீபாவளி பண்டிகையில் அதிகம் ஒலி எழுப்பும் பட்டாசு வெடிப்பதை பல ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர்.

பொதுவாக பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பட்டாசும் வான வேடிக்கையும் கட்டாயமாக உள்ள தற்போதைய ஆடம்பர வாழ்க்கை சூழ்நிலையில், பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதை இந்த கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த பழந்தின்னி வவ்வால்கள் இறைதேட பல கிலோமீட்டர் தூரம் சென்று பழம்கள் மற்றும் பூக்களை உணவாக உண்டு வாழ்கின்றன. இதுபோல் அனைத்து கிராம மக்களும் அழிந்து வரும் பறவை இனத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும். மரம் வளர்க்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்,

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com