தடுப்புச்சுவரை தாண்டி கடல் பாறை மீதேறி அபாயகரமாக மீன்பிடித்த இளைஞர்கள்!

தடுப்புச்சுவரை தாண்டி கடல் பாறை மீதேறி அபாயகரமாக மீன்பிடித்த இளைஞர்கள்!
தடுப்புச்சுவரை தாண்டி கடல் பாறை மீதேறி அபாயகரமாக மீன்பிடித்த இளைஞர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் அறுபது அடி உயர கடல் அலை தடுப்பு சுவரின் கீழ் இறங்கி எச்சரிக்கையையும் மீறி ஆபத்தான முறையில் கடலில் மீன்பிடிக்கும் வாலிபர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த மீன்பிடி துறைமுகத்தில் கடல் நடுவே சுமார் 60 அடி உயரத்தில் இரண்டு பக்கங்கைளிலும் கடல் அலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு ராட்சத "கோர் லாக்" கற்களும் பதிக்கப்பட்டுள்ளது. இன்று அந்த பகுதிக்கு வந்த இரண்டு இளைஞர்கள், அறுபது அடி உயரம் கொண்ட கடல் அலை தடுப்பு சுவரின் கீழே இறங்கி கடலில் தூண்டிலால் மீன்பிடிக்க ஆரம்பித்தனர்.

தற்போது கடல் பகுதியில் சூரைக்காற்றுடன் கடல் சீற்றத்துடனே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கும் நிலையில் "கர்ணம் தப்பினால் மரணம்" என்ற ஆபத்தான நிலையில் அந்த வாலிபர்கள் மீன்பிடித்து கொண்டிருப்பதை கண்ட அந்த வழியாக படகில் சென்ற மீனவர்கள் அவர்களை எச்சரித்துள்ளனர். ஆனாலும் அதை கண்டு கொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து மீன்பிடித்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பகுதியில் வாலிபர்கள் சிலர் ஆபத்தான முறையில் கீழே இறங்கி செல்பி எடுப்பது, மீன் பிடிப்பது போன்ற செயல்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே இந்த பகுதிகளில் கடலோர காவல் நிலைய போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com