தமிழ்நாடு
தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலையில் ராஜநடை போட்ட புலி: நெட்டிசன்களை கவர்ந்த வீடியோ
தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலையில் ராஜநடை போட்ட புலி: நெட்டிசன்களை கவர்ந்த வீடியோ
தேசிய நெடுஞ்சாலையில் புலி ஒன்று ஒய்யாரமாக ராஜநடை போட்டு வரும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்கள் மனதையும் வென்றுள்ளது. இந்த வீடியோவை புகைப்படக்காரர் ராஜ் மோகன் படம் பிடித்துள்ளார். அவர் அதனை கடந்த 31-ஆம் தேதி ட்விட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுசந்தா நந்தா, ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 15 நொடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் பார்க்க வனப்பாக உள்ள புலி ஒன்று நிதானமாக தேசிய நெடுஞ்சாலையில் நடை போடுகிறது. அடுத்த சில நொடிகளில் அடர்ந்த வனத்திற்குள் நுழைந்து மறைகிறது அந்த புலி.
இந்த வீடியோவை சுமார் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.