\
கன்னியாகுமரி: இறைச்சிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்

கன்னியாகுமரி: இறைச்சிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்

கன்னியாகுமரி: இறைச்சிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்
Published on: 

கன்னியாகுமரி அருகே இறைச்சிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

பரம்பை பகுதியில் உள்ள குடியிருப்புகளில், சிலர் இறைச்சிக் கழிவுகளை கொட்டிச் செல்வதாகக் கூறப்படுகிறது. இதனால், விடிய விடிய அப்பகுதி மக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சரக்கு வாகனத்தில் வந்த இளைஞர்கள், இறைச்சிக் கழிவுகளை கொட்ட முயற்சித்தனர். உடனடியாக அவர்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இறைச்சிக் கழிவுகளை சேகரித்து கொட்டி வருவது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிக்க: பெண்ணிடம் 30 பவுன் நகை, ரூ. 4.5 லட்சம் மோசடி: போலி வழக்கறிஞர் கைது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com