TTF VasanFile Image
தமிழ்நாடு
சென்னை: காரை பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு ஆட்டோவில் பறந்த டி.டி.எப் வாசன்!
டி.டி.எப் வாசன் வந்த கார் மோதி இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிரபல யூடியூபரான டி.டி.எப் வாசன் பைக்கை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளை சந்தித்துள்ளார். இவர் தற்போது 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், டி.டி.எப் வாசன் வந்த கார் மோதி இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. டி.டி.எப் வாசன் நெல்சன் மாணிக்கம் சாலையில் வந்த போது முன்னாடி சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் இரு சக்கரவாகனம் ஓட்டி வந்த நபர் கீழே விழுந்துள்ளார். அதில் அந்த நபர் காயமடைந்துள்ளார். இது குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.