Tragic decision
Tragic decisionpt desk

தென்காசி: வீட்டில் தனியாக இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு

சங்கரன்கோவில் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: டேவிட்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள சேர்ந்தமரம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவரது மகன் பிரபு (23). இவர், திண்டுக்கல்லில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான சேர்ந்தமரத்திற்கு வந்த அவர், சோர்வாக காணப்பட்ட நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

Police station
Police stationpt desk

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சேர்ந்தமரம் காவல் துறையினர், தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tragic decision
அசைவம் சமைத்து தர சொல்லிய கணவர்; செங்கலால் மண்டையை உடைத்த மனைவி! உ.பி.யில் கொடூர கொலை!

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com