வந்தவாசி: தந்தையுடன் டிராக்டரில் அமர்ந்து விவசாய பணி செய்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

வந்தவாசி அருகே விவசாய டிராக்டரில் அமர்ந்திருந்த 6 வயது சிறுவன் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
House
Housept desk

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பண்டாரதோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தண்டபாணி. இவர், தனது சொந்த டிராக்டரில் அவருடைய மகன் தஷ்வந்த் (6) அருகில் உட்கார வைத்துக் கொண்டு உழவு பணி செய்துள்ளார். அப்போது டிராக்டரில் அமர்ந்திருந்த தஷ்வந்த் தவறி கீழே விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த சிறுவன் அலறியுள்ளார். இதையடுத்து தனது மகனை மீட்ட தண்டபாணி, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

Tractor
Tractorpt desk

இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்றுவந்த தஷ்வந்த், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com