மதுரை: மீனாட்சியம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து

மீனாட்சியம்மன் கோவில் அருகே மாசி வீதியில் பழமையான கட்டடத்தில் உள்ள பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையின் முதல் மாடியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

fire service
fire servicept desk

இதுகுறித்து தகவல் அறிந்து திடீர் நகர், அனுப்பானடி, தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐந்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கோவிலைச் சுற்றியுள்ள பழமையான கட்டடங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில் இன்றைய தீ விபத்தில் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் எரிந்து வருவதால் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி வருகிறார்கள். அடுத்த கட்டடத்திற்கு தீ பரவாமல் தடுக்க ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com