தமிழ்நாடு
தமிழ்நாடு முழுவதும் நாளை 10,000 தடுப்பூசி முகாம்கள்
தமிழ்நாடு முழுவதும் நாளை 10,000 தடுப்பூசி முகாம்கள்
தமிழ்நாடு முழுவதும் நாளை நடத்தப்பட உள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில், சென்னையில் மட்டும் மூன்றரை லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நாளை 10,000 முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 600 முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று சென்னையில் 400 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. செப்டம்பர் 9 ஆம் தேதி நிலவரப்படி, சென்னை மாநகராட்சி மூலம் 43 லட்சத்து 71 ஆயிரத்து 309 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாளை சென்னையில் மூன்றரை லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ள மாநகராட்சி நிர்வாகம், இப்பணிகளில் தலா 600 மருத்துவர்களையும் செவிலியரையும் ஈடுபடுத்த உள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 5,800 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

