வலுதூக்கும் வீராங்கனைக்கு வலு சேர்க்குமா அரசு ?

வலுதூக்கும் வீராங்கனைக்கு வலு சேர்க்குமா அரசு ?

வலுதூக்கும் வீராங்கனைக்கு வலு சேர்க்குமா அரசு ?
Published on

வலுதூக்கும் போட்டியில் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் உலக கோப்பையில் கலந்துகொள்ள அழைப்பு வந்தும் போதிய நிதிவசதி இல்லாமல் கலந்துகொள்ள முடியாமல் யாராவது உதவுவார்களாக என்று எதிர்ப்பார்த்து காத்து இருகிறார் தஞ்சையை சேர்ந்த மாணவி.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பலுதூக்கும் வீராங்கனை லோகபிரியா. பட்டுக்கோட்டை நகரபகுதியில் தெருவோர குடிசை பகுதியில் வாடகை வீட்டில் தனது தாய் ரீட்டாமேரி மற்றும் இரண்டு சகோதரியுடன் வசித்து வருகிறார். இவர் தந்தை இருந்தும் பயனற்ற நிலையில் தனது ஏழ்மை நிலையிலும் சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்முடன் காணப்பட்டுள்ளார்.

அரசு உதவி பெரும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது குத்துசண்டை சண்டையில் ஆர்வமுடன் இருக்கும் இவருக்கு ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்துள்ளனர். பயிற்சியின் போது அதிக அளவிற்கு எடை தூக்குவதை கண்ட பயிற்சியாளர்கள் இவரது திறமையை வலுத்தூக்கும் போட்டிக்கு அதிநவீன முறையில் பயிற்சியும் அளித்துள்ளனர். 

பயிற்சியை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்ட லோகப்பிரியா, விளையாட்டில் அதிக ஆர்வமுடன் இருந்ததால்  மாநிலத்தில் பல பள்ளிக்கும் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களையும் கேடயங்களையும் வென்றுள்ளார். பின் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் இளையோருக்கான வலுத்தூக்கும் போட்டியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இது மட்டுமின்றி ஆசிய அளிவிலான போட்டிகளிலும் பங்கு பெற்று தங்கம் வென்றதால் கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பங்குப்பெற அழைப்பு வந்தது. ஆனால் போட்டியில் கலந்துக்கொள்ள அழைப்பு வந்தும் போதிய நிதி வசதியில்லாமல் வாய்ப்பை தவறவிட்டார். இந்த நிலையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் 8ம் தேதிவரை தென்ஆப்ரிக்காவில் நடைபெறும் இளையோருக்கான வலுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. 

அதற்கு இந்த மாத இறுதிக்குள் நுழைவு தொகை செலுத்த வேண்டும். இது மட்டும் இன்றி போட்டியில் பங்கேற்க சென்று வர நான்கு லட்சம் ருபாய் வரை செலவு ஆகும் என்பதால் போட்டியில் எப்படி பங்கு பெறுவது எப்படி செல்வது என்று தெரியாமல் பிறரின் உதவியை நாடியுள்ளார் லோகபிரியா. பட்டுக்கோட்டையில் பயிற்சியாளர்கள் இவரது ஆர்வத்தை புரிந்துக்கொண்டு இலவச பயிற்சி அளித்து நிதி திறட்டி வந்தாலும் இது போதாது என்கின்றனர்.

நல்ல உள்ளம் படைத்த சிலர் இவருக்கு உதவி செய்தால் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்தோடு தனது குடும்பதையும் உயர்த்த முடியும் என்கின்றார். ஏழ்மை நிலையில் இருந்த போதும் உலக கோப்பை போட்டிக்கு தேர்வு பெற்றும் போதிய நிதியில்லாமல் உள்ள மாணவிக்கு அரசு உதவி செய்து ஊக்குவிக்க வேண்டும் என்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com