\
சிறுமி மேஹா
சிறுமி மேஹாPT

ரோலர் ஸ்கேட்டிங்கில் தேசிய அளவில் பதக்கம் பெற்று சாதித்த தமிழக மாணவி!

சென்னையில் டிசம்பர் 15 முதல் 17 வரை நடைபெற்ற 61வது ஆர்எஸ்ஐ நேஷனல் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், கோயம்புத்தூரில் சர்வதேச வீராங்கனையின் கீழ் 8 வயது சிறுமி சாதனை படைத்தார்
Published on

தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ரோலர் ஸ்கேட்டிங்கில் தேசியப் பதக்கம் வென்றுள்ளார்.

சென்னையில் டிசம்பர் 15 முதல் 17 வரை நடைபெற்ற 61வது ஆர்எஸ்ஐ நேஷனல் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், கோயம்புத்தூரில் சர்வதேச வீராங்கனையின் கீழ் பயிற்சி பெற்று வரும் 8 வயது சிறுமி மேஹா 2 வெள்ளிப் பதக்கங்களையும் 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

இன்லைன் ஸ்கேட்டிங் பிரிவில் 7 முதல் 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 500 மீட்டர் ரிங்க் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 1 லேப் ரோடு பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 1 லேப் ரிங்க் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

இது அவ்வளவு எளிதானது அல்ல, அதற்கு கடின பயிற்சி தேவை என்றும், இந்த பதக்கத்திற்காக மேஹாவுக்காக 2 வருட கடின உழைப்பை எடுத்துள்ளோம் என்றும் அவரது பயிற்சியாளர் ராகுல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும், "மேஹா தற்போது கோவையில் V.o.c ஸ்கேட்டிங் மைதானத்தில் என்னுடன் பயிற்சி பெற்று, எதிர்காலத்தில் சர்வதேச பதக்கத்தில் பெருவதில் கவனம் செலுத்துகிறார்" என்கிறார் பயிற்சியாளர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com