தேமுதிக நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த், நேற்று உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது மறைந்த செய்தியால் திரையுலகம் மட்டுமின்றி, தென்னகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில், அவரது நினைவலைகளை இணையத்தில் பலரும் பகிர்ந்து ஆறுதல் தேடி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அவர் படங்களில் நடித்து பிரபலமான வசனங்களையும் தற்போது அவரது ரசிகர்களும் தொண்டர்களும் நினைவுகூர்ந்து வருகின்றனர். இதுகுறித்த தொகுப்பை இங்கே காணலாம்.
'தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை, மன்னிப்பு’ - ரமணா
’நான் கவர்ன்மென்ட் சர்வன்ட்தான்... ஆனால் கவர்ன்மென்ட் மக்களோட சர்வன்ட்’ - கேப்டன் பிரபாகரன்
’துளசிகூட வாசம் மாறினாலும் மாறும்; இந்த தவசி வார்த்தை மாறமாட்டான்' - தவசி
’நான் ஏழைகளில் ஒருவனாக இருக்கத்தான் ஆசைப்படுறேன்’ - ஏழை ஜாதி
’இந்தியா தப்பான இடத்துக்குப் போனதே அரசியல்வாதிங்களாலதான்’ - மாநகர காவல்
'எனக்கு அன்பாகப் பேசவும் தெரியும்; அவசியம்ப்பட்டா அருவா வீசவும் தெரியும்’ - தவசி
’எங்களுக்கு ஆட்சி வேணாம்; ஆட்சியில இருக்குறவங்களுக்கு ஒழுக்கம் வேணும்; நாணயம் வேணும்; நேர்மை வேணும்’ - ஏழை ஜாதி
’ஆத்திரத்தோடதான் போவேன்; ஆசிர்வாதம் பண்ணிட்டு வரேன்’ - சின்ன கவுண்டர்
’சாதாரண மனுஷனுக்குத்தான் கரன்ட தொட்டா ஷாக் அடிக்கும்; நான் நரசிம்மா. என்னை தொட்டா அந்த கரண்டுக்கே ஷாக் அடிக்கும்' - நரசிம்மா
‘உனக்குத் தெரிஞ்சது 3 டி; எனக்குத் தெரிஞ்ச இன்னொரு டி தெரியுமா?’ - தமிழ் செல்வன்
’சாமி எல்லா இடத்துலேயும் இருந்தாலும் கும்பிடறதுக்குனு ஒரு இடம் வேணும்; அதுக்குப்பேருதான் கோயில். அதை தூக்கிவச்சு விளையாடறதுக்கு மனுஷனுக்கு சக்தி கிடையாது. அதுலபோயி நாம தகராறும் பண்ணக்கூடாது’ - சின்ன கவுண்டர்
’காந்தி பிறந்த இந்த மண்ணுலதான் சுபாஷ் சந்திரபோஸும் பிறந்தாரு. நான் காந்தியா இருக்குறதும், சுபாஷ் சந்திரபோஸா மாறுறதும் உன் கையுலதான் இருக்கு’ - வல்லரசு
’எனக்கு இன்னிக்குதான் சுதந்திரம் கொடுத்திருக்கீங்னு நினைக்கிறேன்; இந்தியாவுக்கு சுதந்திரம் ராத்திரில் கெடச்சது, முன்னேறல. எனக்குப் பகல்ல கெடச்சிருக்கு. முன்னேறி காட்டுறேன்’ - ஏழை ஜாதி
‘உங்களைப் பார்க்கணும்னுதானே சொன்னேன்; பெட்டியோட வந்திட்டீங்க’ - வாஞ்சிநாதன்
’என்னைத் துளைக்கும் தோட்டா இன்னும் கண்டுபிடிக்கலை’ - நரசிம்மா
’எங்கீழ வேல பார்க்குறவங்களும் நேர்மையாதான் இருக்கணும்’ - தென்னவன்
’உனக்கு தண்டனை நான் கொடுக்கல; இந்த நாடு கொடுக்கட்டும்.. இந்த நாட்டு மக்கள் கொடுக்கட்டும்’ - சேதுபதி ஐபிஎஸ்
’உளவுத்துறையப் பத்தி எனக்கும் தெரியும். ஆனா, என்னை கண்காணிக்கிற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலையே’ - விருதகிரி
’எம்மண்ணுல இப்படிப்பட்டவங்க இருக்குறாங்க அதை நெனச்சி நான் ரொம்ப பெருமைப்படுறேன்’ - கண்ணுபடப் போகுதய்யா
’நான் வீரனா இல்லையானு இந்த நாட்டு மக்களுக்குத் தெரியும். இப்ப நீ தெரிஞ்சுக்க’ - பெரிய மருது