புயல்புதியதலைமுறை
தமிழ்நாடு
3 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
சென்னை கடலூர் நாகை துறைமுகங்களில் 4ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான அதி தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையானது தமிழக கடலோரப் பகுதிகளை மிரட்டி வரும் நிலையில், அது இன்று மாலை புயலாக மாறக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த ஃபெங்கல் புயலானது மெல்ல மெல்ல நகர்ந்து, வருகின்ற 30ம் தேதி சென்னைக்கும் பரங்கிப்பேட்டைக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை, கடலூர், நாகை துரைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.
இதையொட்டி எண்ணூர் பாம்பன், காட்டுப்பள்ளி, புதுச்சேரி காரைக்கால், தூத்துக்குடி உட்பட 6 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் 4ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.