2024 நாடாளுமன்றத் தேர்தல்: அண்ணாமலை தலைமையில் தீவிர ஆலோசனை கூட்டம்!

2024 நாடாளுமன்றத் தேர்தல்: அண்ணாமலை தலைமையில் தீவிர ஆலோசனை கூட்டம்!
2024 நாடாளுமன்றத் தேர்தல்: அண்ணாமலை தலைமையில் தீவிர ஆலோசனை கூட்டம்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக  கமலாலயத்தில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில மைய குழு கூட்டம் நடைபெற்றது.

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மையப்படுத்தி தமிழக பா.ஜ.க. பல்வேறு ஆலோசனைகளை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகரில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று காலை மாநில மைய குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பா‌.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுவது, பூத் கமிட்டி, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 11 மணி அளவில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் மதியம் வரை நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com