\
A situation where it is speculated that the TVK government could fall
TVK government could fallTVK

TVK ஆட்சிக்கு ஆபத்தா? இடதுசாரிகள் விலகினாலோ.. இடைத்தேர்தலில் தோற்றாலோ என்ன ஆகும்?

இடதுசாரிகள் அரசுக்கான தங்கள் ஆதரவை எப்போது வேண்டுமானாலும் வாபஸ் பெறலாம் என்ற அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
Published on

தமிழ்நாட்டில் தவெக அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ், விசிக, IUML, இரு இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ளது. இதில் பிற கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் மட்டுமே வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.

இந்தச் சூழலில், இடதுசாரி கட்சிகள் கடந்த சில நாட்களாகவே பல்வேறு விவகாரங்களில் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், எங்களது ஆதரவால்தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் மந்திரி சபையே இருக்காது என்றும் சிபிஐ மூத்த தலைவர் முத்தரசன் கூறியிருந்தார்.

இதன் காரணமாக இடதுசாரிகள் அரசுக்கான தங்கள் ஆதரவை எப்போது வேண்டுமானாலும் வாபஸ் பெறலாம் என்ற அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால் தவெக அரசு கவிழ வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இடதுசாரிகள் ஆதரவு இல்லாமலேயே தவெக அரசுக்கு பெரும்பான்மை இருக்கும் சூழல்தான் தற்போது உள்ளது. தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மேலும் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற முதல்வர் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப் பேரவையில் மொத்தம் 7 இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை இடங்கள் தற்போது 114 ஆகக் குறைந்துள்ளது. தற்போது தவெகவின் 107 சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள், விசிக மற்றும் IUML கட்சியின் தலா 2 உறுப்பினர்கள் என தவெக அரசிடம் 115 உறுப்பினர்கள் உள்ளனர்.

தற்போது இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் தவெக வெற்றிபெற்றால் தவெக அரசின் பலம் சட்டப்பேரவையில் 117 ஆக உயரும். அதே நேரம், எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றாலும்கூட பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 115 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே போதும் என்ற சூழல் உருவாகும். எனவே இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவி, இடதுசாரிகள் அரசுக்கான தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றால்கூட தவெக அரசுக்கு சட்டப்பேரவையில் போதிய பெரும்பான்மை உள்ளது என்பதும், இதனால் ஆட்சி கவிழ வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com