\
திண்டுக்கல்: சாலையில் அமர்ந்த மூதாட்டியை தண்ணீரை ஊற்றி விரட்டிய கடை விற்பனையாளர்

திண்டுக்கல்: சாலையில் அமர்ந்த மூதாட்டியை தண்ணீரை ஊற்றி விரட்டிய கடை விற்பனையாளர்

திண்டுக்கல்: சாலையில் அமர்ந்த மூதாட்டியை தண்ணீரை ஊற்றி விரட்டிய கடை விற்பனையாளர்
Published on

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் கடை முன் உள்ள சாலையில் அமர்ந்த மூதாட்டியை தண்ணீரை ஊற்றி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி காந்திரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் முன்பாக சாலையோரமாக ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தபோது கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் வாளியில் தண்ணீரை கொண்டுவந்து மூதாட்டி அமர்ந்திருந்த பகுதியில் ஊற்றியிருக்கிறார். இதில் சேலை நனைந்த அந்த மூதாட்டி அங்கிருந்து எழுந்து செல்லும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com