குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Published on

காஞ்சிபுரம் அருகே 140 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் பணம் கொள்ளை. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருகே பெரியநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி (52). இவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த 140 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து மாகரல் போலீசாருக்கு தகவல் தெரியபடுத்தினர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளை நடந்த கணபதி வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com