நகைகளை கழற்றி வைத்துவிட்டு தூங்கிய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நகைகளை கழற்றி வைத்துவிட்டு தூங்கிய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நகைகளை கழற்றி வைத்துவிட்டு தூங்கிய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Published on

தொழிலதிபரின் வீடு புகுந்து 65 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை திருச்செந்தூர் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்செந்தூரில் கீழ வெயிலுகந்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகேசன் - கலாவதி தம்பதியர் இவரது மகன் பாலகுமார் என்பவர் திருச்செந்தூரில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தொழிலதிபர் பாலகுமார் தனது வீட்டின் மாடியில் தூங்கும்போது தான் அணிந்திருந்த 20 பவுன் தங்க நகையை கழற்றி அலமாரியிலுள்ள லாக்கரில் வைத்துவிட்டு தூக்குவது வழக்கம், அதேபோல் நேற்றிரவு நகைகளை கழற்றி வைத்துவிட்டு தூங்கியுள்ளார். இதையடுத்து காலையில் எழுந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் பாலகுமாரின் 20 பவுன் நகைகள் என மொத்தம் 65 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கலாவதி திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து விரைந்து வந்த திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆவுடையப்பன், தடவியல் நிபுணர்களுடன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் இரவு உறங்கும் போது வீட்டின் பால்கனி கதவை பூட்டாமல் இருந்ததால் மர்ம நபர்கள் யாரோ வீடு புகுந்து 25 லட்சம் மதிப்பிலான 65 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

வீடு புகுந்து 65 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com