ராகிங் கொடுமை
ராகிங் கொடுமைமுகநூல்

"மன்னிச்சிடுங்க அம்மா; உருவகேலி தாங்க முடியல:.. ராகிங் கொடுமையால் பள்ளி மாணவர் எடுத்த விபரீத முடிவு!

சென்னையில் ராகிங் கொடுமையால் பள்ளி மாணவர் தற்கொலை. சக மாணவர்கள் உருவகேலி செய்ததால் விபரீத முடிவு.
Published on

சென்னையில், ராகிங் கொடுமையால் மன உளைச்சலுக்கு ஆளான பள்ளி மாணவன், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்தேறி உள்ளது.

சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த கோபிநாத், நித்யா தம்பதியின் 17 வயதான மகன் கிஷோர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், பள்ளியில் சக மாணவர்கள் உருவகேலி செய்ததால் கிஷோர் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படும் நிலையில், வீட்டின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ராகிங் கொடுமை
ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரஃபேல் விமானங்கள்.. மத்திய அரசு ஒப்புதல்!

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தனது தாயை தொலைப்பேசியில் அழைத்து, தன்னை மன்னித்துவிடுங்கள் எனக்கூறிவிட்டு செல்போனை துண்டித்தது தெரியவந்துள்ளது. உருவகேலி செய்வது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com