கடத்தப்பட்ட பள்ளி மாணவி: கண்டுகொள்ளாத காவல்துறை

கடத்தப்பட்ட பள்ளி மாணவி: கண்டுகொள்ளாத காவல்துறை

கடத்தப்பட்ட பள்ளி மாணவி: கண்டுகொள்ளாத காவல்துறை
Published on

அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்டார். ஆனால் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சின்னநடுப்பட்டி பகுதியில் வசிப்பவர் ராஜா மனைவி அலமேலு. இவருக்கு குழந்தை இல்லாமல் கணவனை இழந்த நிலையில் தனியாக கூலிவேலை செய்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு குழந்தை இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தன்னுடைய தம்பி ராஜாவின் மகளை குழந்தை பருவத்திலிருந்தே இவர் வளர்த்து வருகிறார். தற்போது அந்தப் பெண் குழந்தை ஓமலூர் அருகேயுள்ள பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.  

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று இரவில் இருந்து மாணவியை காணவில்லை. காணாமல் போன சிறுமியை உறவினர்களின் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அலமேலுவின் பெண் பிள்ளையை, அதேபகுதியை சேர்ந்த ராமன் என்ற வாலிபர் அவரது நண்பர்கள் அஜித்குமார், முருகேசன், சிவா மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உதவியுடன் கடத்திச் சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கடத்தப்பட்ட தனது மகளை கண்டுபிடித்து கொடுக்குமாறு அலமேலுவும், அவரது தம்பி ராஜாவும் ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்தனர். 

புகார் கொடுத்து பத்து நாட்களாகியும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தங்களையே தேடி கண்டுபிடிக்குமாறு கூறுவதாகவும் கூறி அவர்கள் காவல் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்களையே மிரட்டுகிறார் என்று கூறி ஓமலூர் டி.எஸ்.பி பாஸ்கரனிடம் புகார் கொடுத்தனர். மேலும், உயரதிகாரிகள் மாணவி கடத்தல் சம்பவத்தில் கவனம் செலுத்தி விரைவில் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com