தங்க மோதிரத்தை ஒப்படைத்த தூய்மை பணியாளர்
தங்க மோதிரத்தை ஒப்படைத்த தூய்மை பணியாளர்pt

குப்பையில் கிடந்த தங்க மோதிரம்.. தூய்மை பணியாளர் செய்த செயலுக்கு பாராட்டு!

வேலூரில் குப்பையில் கிடந்த தங்க மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Published on
Summary

வேலூர் மாநகராட்சியின் தூய்மை பணியாளர் நவீன், குப்பையில் கிடைத்த அரை சவரன் தங்க மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்து, அப்பகுதி மக்களிடமிருந்து பாராட்டைப் பெற்றார். நகையை தவறவிட்ட உஷா, நவீனின் நேர்மையான செயலால் நன்றி தெரிவித்தார்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது மண்டலம் 37 ஆவது வார்டு ஓல்டு டவுன் பகுதியில் உள்ள தோல் கிடங்கு மெயின் ரோடு பகுதியில் நேற்று மாநகராட்சியின் தூய்மை பணியாளர் நவீன் (31) என்பவர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார்.

வீட்டிலிருந்து ஒப்படைத்தவர்களின் குப்பைகளை தரம் பிரிக்கும் போது அதில் அரை சவரன் தங்க மோதிரம் இருந்துள்ளது. இதுகுறித்து அவருடைய உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட போது, நகையை தவறவிட்டது தோல்கிடங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த உஷா என்பதும், அவர்கள் நகையை தேடி வந்ததும் தெரியவந்து. அரை சவரன் தங்க மோதிரத்தை உரியவரிடம் தூய்மை பணியாளர் ஒப்படைத்தார். இதனைப் பெற்றுக் கொண்ட பெண்மணி தூய்மை பணியாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளரின் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com