சீனாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா உறுதி!

சீனாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா உறுதி!
சீனாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா உறுதி!

சீனாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த அந்த நபர் சேலம் சுகாதார துறையினர் கண்காணிப்பில் உள்ளார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 23 ம் தேதி முதல் நேற்று வரை வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளில் ஒருவருக்கு மட்டும் கொரொனா தொற்று இருப்பது உறுதியாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா உட்பட சில நாடுகளில் கொரொனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு ரேண்டம் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை 9 சர்வதேச விமானங்கள் வந்துள்ளன.

இதில் 1357 பயணிகள் வந்துள்ள நிலையில், ரேண்டம் அடிப்படையில் 64 பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த பயணி சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்துள்ளார். நேற்று முன் தினம் சிங்கப்பூரில் இருந்து வந்த அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது.

நேற்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சேலம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை விமான நிலையத்திற்கு சார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தினமும் இரு விமானங்கள் கோவை வந்து செல்வது குறிப்பிட தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com