தூத்துக்குடி| 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் கைது!
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே ஆனந்த நகர் தேவாலயத்தில் பணியாற்றிய மதபோதகர் அருள்ராஜ், தேவாலயத்திற்கு வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சிறுமி தாயிடம் விவரங்களை பகிர்ந்ததையடுத்து, குடும்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அருள்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, தாளமுத்து நகர் அருகே உள்ள ஆனந்த நகர் பகுதியில் தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த தேவாலயத்தில் அருள்ராஜ் என்பவர் மதபோதகராக பணிபுரிந்து வந்த நிலையில், தேவாலயத்திற்கு வந்த ஒரு 12 வயது சிறுமிக்கு மதபோதகர் அருள்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் அத்துமீறல் குறித்து தனது தாயிடம் தெரிவித்த நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து விசாரணை செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட மத போதகர் அருள் ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

