\
சேலம்: புதுமண தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோல்... திரும்பி பார்க்க வைத்த கல்யாண பரிசு!

சேலம்: புதுமண தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோல்... திரும்பி பார்க்க வைத்த கல்யாண பரிசு!

சேலம்: புதுமண தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோல்... திரும்பி பார்க்க வைத்த கல்யாண பரிசு!
Published on

சேலத்தில புதுமண தம்பதிக்கு வித்தியாசமாக உறவினர் ஒருவர் கல்யாண பரிசாக பெட்ரோலை வழங்கினார்.

சேலம் கோட்டை பகுதியில் முகமது ரகுபதின், ஜபசூம் நசியா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்துக்கு வந்த உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு பல்வேறு பரிசு பொருட்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் முகமது காசிம் என்பவர் மணமக்களுக்கு கேனில் 5 லிட்டர் பெட்ரோலை கல்யாண பரிசாக வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அன்றாட அத்தியாவசிய தேவையான பெட்ரோல் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்வதால் மணமக்களுக்கு பெட்ரோலை கல்யாண பரிசாக வழங்கியதாக முகமது காசிம் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com