
மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பதில் அளித்து பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, காங்கிரஸ் கட்சி தான் ஊழலை கண்டுபிடித்தவர்கள் என்று சாடியதுடன் நீங்கள் மணிப்பூர் பற்றி பேசும் முன்பு தமிழ்நாட்டைப் பற்றி பேசுங்கள், பாஜக பற்றி பேசும் போது உங்கள் கூட்டணியில் உள்ள திமுக பற்றி பேசுங்கள், ஊழல் பற்றி பேசும் பொழுது உங்களுடனே இருக்கக்கூடிய திமுகவை பாருங்கள், நீங்கள் இந்தியாவிற்கு ஊழலை கொண்டு வந்தவர்கள் என்றால் தமிழ்நாட்டிற்கு ஊழலை கொண்டு வந்தவர்கள் திமுக என நேரடியான விமர்சனத்தை முன் வைத்தார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் உடனடியாக எதிர்வினை ஆற்றபட்டது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, தன்னை கைது செய்து விடுவேன் என ஸ்மிருதி இராணி மிரட்டுவதாகவும் அப்படி என்றால் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.
இச்சம்பவத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தராசு ஷ்யாமை புதிய தலைமுறையின் சார்பில் தொடர்பு கொண்டு கேட்ட போது இச்சம்பவம் குறித்து அவர் விளக்கமளித்தார். அதில், “ஆ.ராசா, கனிமொழி மீதான வழக்குகளில் இருந்து அவர்கள் விடுதலை ஆகிவிட்டார்கள், மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவ்வாறு மத்திய அமைச்சர் இவ்வாறு பேசுவது மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்” என்றார். தராசு ஷ்யாம் பேசிய முழுவதும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் உள்ளது.